கோவை
கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவிற்கு மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார். காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அதன் பின்னர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
பின்னர் அவர், 25 ஆண்டுகாலம் சிறப்பாக பணியாற்றிய 36 ஊழியர்களுக்கு தலா ரூ 2 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ் களை அவர் வழங்கினார். மேலும் 20 பேருக்கு ஓய்வூதிய பயன்களும், 81 பேருக்கு நற்சான்றிதழ்களையும் வழங்கினார்.
கோவை ராமலிங்கம் காலனி மாநகராட்சி பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவி மொஷிகா பிராமி எழுத்துகளை படித்து தமிழ் இலக்கியங்களை புத்தக வடிவில் வெளியிட்டதற் காக அவருக்கு கையடக்க மடிக்கணினியை வழங்கி பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் துணை கமிஷனர் விமல்ராஜ், மாநகராட்சி தலைமை என்ஜினீயர் லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.