மதுவிற்ற 27 பேர் கைது

மதுவிற்ற 27 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-08-15 17:14 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் சுதந்திரதினவிழாவையொட்டி மதுக்கடை அடைக்கப்பட்டிருந்தது. 
இதனையொட்டி மதுபானங்களை பதுக்கி வைத்துவிற்பனை செய்வதை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின்பேரில் போலீசார் மாவட்டம் முழுவதும்  அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். 
இந்த சோதனையில் கள்ளத்தனமாக மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 27 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 469 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்