நகை திருட்டு

பல்லடம் அருகே கணக்காளர் வீட்டின் பூட்டை உடைத்து நகையை மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர்.

Update: 2021-08-15 16:57 GMT
பல்லடம்
பல்லடம் அருகே கணக்காளர் வீட்டின் பூட்டை உடைத்து நகையை மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர். 
 இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
கணக்காளர்
 சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் சிவா வயது 41.  இவருக்கு உமையாள் 35 என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர் பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சி கற்பகம் கார்டன் பகுதியில், சொந்தமாக வீடு கட்டி குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். மேலும் திருப்பூரில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். 
இந்த நிலையில் குலதெய்வக்கோயிலுக்கு சாமி கும்பிடுவதற்காக கடந்த 12ந் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து நேற்று அதிகாலை 5 மணியளவில், வீட்டிற்கு திரும்பியுள்ளார். முன்புற வாசல் கேட்டைத் திறந்து உள்ளே சென்றபோது. வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது வீட்டினுள் இருந்த, பீரோ திறக்கப்பட்டு உடைகள், சிதறிக்கிடந்தன. 
நகை திருட்டு
பீரோவில் வைத்திருந்த, இரண்டு வளையல்  கம்மல் என 3 பவுன் நகை் திருடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.  சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மற்றும் தடயவியல் நிபுணர்கள் வீட்டில் ஆய்வு செய்தனர். 
மேலும் அருகே உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வுசெய்து, இந்த திருட்டு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும் செய்திகள்