வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
வேடசந்தூர் திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே உள்ள அச்சனம்பட்டியை சேர்ந்த காளிமுத்து மகன் பாலச்சந்திரன் (வயது 22). இவர் வேடசந்தூர் பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார்.
பாலச்சந்திரன் தனக்கு திருமணம் செய்து வைக்கவேண்டும் என்று பெற்றோரிடம் கூறிவந்ததாக தெரிகிறது. பெற்றோர் சிறிது நாட்கள் கழித்து திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளனர்.
இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து எரியோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.