குழந்தை இல்லாத ஏக்கத்தில் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
ஊத்தங்கரை அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி:
கிணற்றில் குதித்து தற்கொலை
ஊத்தங்கரை அருகே உள்ள மல்லிப்பட்டி சாமியார் நகரை சேர்ந்தவர் நந்தீஸ்வரன் என்கிற விஜய். இவருடைய மனைவி அலமேலு (வயது 23). இவர்களுக்கு திருமணமாகி 2½ ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இதனால் மனவேதனையில் இருந்து வந்த அலமேலு அந்த பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணமாகி 2½ ஆண்டுகளே ஆவதால் அலமேலு தற்கொலை குறித்து ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு அலெக்சாண்டரும் விசாரணை நடத்தி வருகிறார்.
கடன் பிரச்சினை
காவேரிப்பட்டணம் ஜெய்னூரை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி வெண்மணி (30). கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் 2 பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்தநிலையில் இந்த தம்பதிக்கு கடன் பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இதனால் மனமுடைந்த வெண்மணி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.