தொப்பூர் கணவாயில் லாரி கவிழ்ந்து 2 டிரைவர்கள் காயம்
தொப்பூர் கணவாயில் லாரி கவிழ்ந்து 2 டிரைவர்கள் காயம் அடைந்தனர்.
நல்லம்பள்ளி:
தொப்பூர் கணவாயில் லாரி கவிழ்ந்து 2 டிரைவர்கள் காயம் அடைந்தனர்.
லாரி கவிழ்ந்தது
பெங்களூருவில் இருந்து பெயிண்டு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி, திருச்சி செல்வதற்காக தர்மபுரி மாவட்டம் வழியாக நேற்று முன்தினம் இரவு வந்து கொண்டு இருந்தது. இந்த. லாரியை கள்ளக்குறிச்சியை சேர்ந்த டிரைவர் துரைக்கண்ணன் (வயது 41) என்பவர் ஓட்டி வந்தார். இவருடன் மாற்று டிரைவராக அதேபகுதியை சேர்ந்த பூமாலை (39) உடன் வந்தார்.
தொப்பூர் கணவாயில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர்கள் 2 பேரும் சிக்கி காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து வந்து விபத்தில் சிக்கிய டிரைவர்கள் 2 பேரையும் மீட்டு தொப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
இந்த விபத்து காரணமாக தர்மபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் பொக்லைன் எந்திரம் மூலம் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.