நண்பர்களுடன் குளித்தபோது தொப்பையாறு அணையில் மூழ்கிய தறி தொழிலாளி பிணமாக மீட்பு

நண்பர்களுடன் குளித்தபோது தொப்பையாறு அணையில் மூழ்கிய தறி தொழிலாளி பிணமாக மீட்கப்பட்டார்.

Update: 2021-08-15 15:24 GMT
நல்லம்பள்ளி:
 தொப்பூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது22). தறி தொழிலாளி. இவர் தனது நண்பர்களான மதியழகன் (26), முருகன் (25) உள்ளிட்டவர்களுடன் தொப்பையாறு அணைக்கு கடந்த 13-ந் தேதி குளிக்க சென்றார். அப்போது சீனிவாசன் திடீரென தண்ணீரில் மூழ்கினார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அங்கு சென்று சீனிவாசனை தேடியும் கிடைக்கவில்லை. இந்தநிலையில் நேற்று சீனிவாசனின் உடல் அணையில் மிதந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்