விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

Update: 2021-08-15 15:19 GMT
விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே உள்ள முஸ்லிம் கோயில்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் மத்தீன்(வயது65) தொழிலாளி.இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். 


இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்து (விஷம்) குடித்து மயங்கி விழுந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

அங்கு டாக்டர்கள் அப்துல் மத்தீனுக்கு முதலுதவி சிகிச்சையளித்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தஅப்துல் மத்தீன் நேற்று முன்தினம் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில்  கிணத்துக்கடவு   போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்