பொள்ளாச்சி
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அசோகன் அணையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அணையில் உள்ள நீரின் அளவு மற்றும் தற்போது அணைக்கு வரும் நீர்வரத்து குறித்து கேட்டறிந்தார்.
மேலும் ஊட்டுக்கால்வாயில் சேதமடைந்த பகுதிகளை அவர் ஆய்வு செய்தார்.இதற்கிடையில் கால்வாயில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டிய விடுப்பட்ட பகுதிகளை தலைமை பொறியாளர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் நவமலையில் இருந்து சர்க்கார்பதி வரை காண்டூர் கால்வாயை ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது பி.ஏ.பி. கண்காணிப்பு பொறியாளர் முத்துசாமி, செயற்பொறியாளர் நரேந்திரன், உதவி செயற்பொறியாளர் லீலாவதி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.