வாழைத்தார் வரத்து குறைவு

வாழைத்தார் வரத்து குறைவு

Update: 2021-08-15 15:06 GMT
வாழைத்தார் வரத்து குறைவு
பொள்ளாச்சி

பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் வாரந்தோறும் புதன்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாழைத்தார் ஏலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று ஏலம் நடந்தது. வழக்கமாக விவசாயிகள் கொண்டு வரும் வாழைத்தார்களை அப்படியே ஏலம் விடுவார்கள்.

ஆனால் தற்போது கொரோனா பரவல் காரணமாக கூட்டம் கூடுவதை தவிர்க்க எடை போடும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று நடந்த ஏலத்தில் அதிக பட்சமாக நேந்திரம் கிலோவுக்கு ரூ.25 முதல் ரூ.37 வரை ஏலம் போனது. இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

கொரோனா காரணமாக வெளியூர்களில் இருந்து வாழைத்தார் கொண்டு வருவதில்லை. தற்போது பொள்ளாச்சி, ஆனைமலை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வாழைத்தார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. சுமார் 1500 வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டன.

 பூவன்தார் கிலோவுக்கு ரூ.15 முதல் ரூ.23 வரையும், கற்பூரவள்ளி ரூ.14 முதல் ரூ.26 வரையும், செவ்வாழை ரூ.25 முதல் ரூ.34 வரையும், நேந்திரம் ரூ.25 முதல் ரூ.37 வரையும், மோரீஸ் ரூ12 முதல் ரூ.15 வரையும் ஏலம் போனது. வழக்கமாக கேரளாவில் இருந்து வியாபாரிகள் வந்து ஏலத்தில் கலந்துகொள்வார்கள்.


தற்போது கேரளாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளதால் வியாபாரிகள் வருவதில்லை. இங்கிருந்து கேரளாவுக்கு கொண்டு சென்று வியாபாரிகளிடம் வழங்கப்படுகிறது.  மேலும் வாழைத்தார் வரத்து குறைந்ததால் விலை அதிகரித்து காணப்பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்