கால்வாயில் மூழ்கி பெட்ரோல் நிறுவன ஊழியர் சாவு

கால்வாயில் மூழ்கி பெட்ரோல் நிறுவன ஊழியர் சாவு.

Update: 2021-08-15 07:09 GMT
கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு அருகே உள்ளது என்.எம்.கண்டிகை கிராமம். இங்கு வசித்து வந்தவர் இமாச்சலம் (வயது 54). பெட்ரோல் நிறுவன ஊழியர். நேற்று அவர் அந்த பகுதியில் உள்ள ஏரி கால்வாயில் பிணமாக கிடந்தார். அவர் கால்வாய் தண்ணீரில் மூழ்கி இறந்ததாக கூறப்படுகிறது. அவரது உடலை பிரேத பரிசோதகனைக்காக போலீசார் பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பாதிரிவேடு போலீசார் சந்தேக சாவாக வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்