மாங்காடு அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி மாணவர் பலி குளிப்பது போல் போட்டோ எடுத்தபோது பரிதாபம்

மாங்காடு அருகே கல்குவாரி குட்டையில் குளிப்பது போல் போட்டோ எடுத்த மாணவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-08-15 06:46 GMT
பூந்தமல்லி,

சென்னை சூளைமேடு புது மேற்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் நித்திஷ் (வயது 17). இவர் 12-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று இவர் தனது சகோதரர் ராகுல் மற்றும் நண்பர்கள் சூர்யா, எழில்மாறன் உள்ளிட்ட 7 பேராக மாங்காடு அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரி குட்டையில் குளிப்பது போல் போட்டோ எடுக்க மோட்டார்சைக்கிளில் சென்றனர்.

கல்குவாரி குட்டையில் குளிப்பது போல் போட்டோ எடுக்கும்போது எதிர்பாராதவிதமாக நித்திஷ் குட்டையில் மூழ்கி விட்டார். இதையடுத்து உடன் இருந்தவர்கள் நித்திஷை மீட்க முடியாமல் தவித்தனர்.

சாவு

இதுகுறித்து மதுரவாயல் தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நித்திஷை பிணமாக மீட்டனர்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து மாங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்