ஆவடி அருகே ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

ஆவடி அருகே ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி தப்பியோடிய மர்ம நபருக்கு போலீஸ் வலைவிச்சு.

Update: 2021-08-15 05:06 GMT
ஆவடி,

ஆவடி அடுத்த சேக்காடு சிந்து நகர் பகுதியில் கனரா வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையத்தில் நேற்று அதிகாலை 2 மணிக்கு மர்ம நபர் ஒருவர் உள்ளே புகுந்து இரும்பு கம்பியால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயற்சி செய்துள்ளார்.

பின்னர் அங்கிருந்த 2 கண்காணிப்பு கேமராக்களையும் அடித்து உடைத்து விட்டு பணத்தை எடுக்க முடியாததால் அங்கிருந்து தப்பி சென்றார். இதையடுத்து நேற்று காலை பணம் எடுப்பதற்காக ஒருவர் ஏ.டி.எம் மையத்திற்கு வந்தபோது, ஏ.டி.எம் எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு ஆவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ஆவடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்ம நபரின் உருவத்தை ஆய்வு செய்தனர். இது குறித்து வங்கி மேலாளர் சுரேஷ்குமார் (வயது 29) கொடுத்த புகாரின் பேரில், ஆவடி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை வலைவீசி தேடி வருகின்றார். ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முடியாமல் எந்திரத்திற்குள் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான பணம் தப்பியது.

மேலும் செய்திகள்