டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை; கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது என்று கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுதந்திர தினமான இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மதுபான சில்லறை விற்பனை கடைகள், டாஸ்மாக் கடைகளை ஒட்டி உள்ள மதுக்கூடங்கள் நட்சத்திர அந்தஸ்து ெபற்ற ஓட்டல்களில் உள்ள பார்கள் அனைத்தும் மூடப்பட்டு இருக்க வேண்டும்.
மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தால், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தத் தகவலை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்தார்.