முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்கு

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2021-08-14 21:41 GMT
கோவை

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு வந்தார். விமான நிலையத்தில் அவரை வரவேற்பதற்காக ஏராளமான அ.தி.மு.க.வினர் குவிந்தனர். 

தற்போது கொரோனா தொற்று காரணமாக பொதுஇடங்களில் கூட்டம் கூட தடை உள்ளது. இந்த நிலையில் விமானநிலையத்தில் அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

திறந்தவெளி ஜீப்பில் நின்றிருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு ஏராளமான தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். மேலும் அவரை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பினர். 

இந்த நிலையில் விமானநிலையத்தில் கூடிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுனன், பி.ஆர்.ஜி. அருண்குமார், கே.ஆர்.ஜெயராம், வி.பி.கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ், அமுல்கந்தசாமி உள்பட 50-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் மீது தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் கீழ் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

மேலும் செய்திகள்