லாரி மோதியதில் தொழிலாளி தலை துண்டாகி பலி

ஜெயங்கொண்டம் அருகே லாரி மோதியதில் தொழிலாளி தலை துண்டாகி பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-08-14 20:40 GMT
ஜெயங்கொண்டம்:

லாரி மோதியது
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கூவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரேசன்(வயது 70). விவசாய கூலி தொழிலாளியான இவர் தனது மொபட்டில் காலியான சிலிண்டர் மற்றும் பால் வாளி உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டு ஜெயங்கொண்டம் நோக்கி வந்தார்.
கீழக்குடியிருப்பு பஸ் நிறுத்தம் அருகே ஜெயங்கொண்டம்- விருத்தாச்சலம் சாலையில் வந்தபோது, அவருக்கு பின்னால் நெய்வேலியில் இருந்து சாம்பல் ஏற்றிக்கொண்டு அரியலூர் நோக்கி வந்த டாரஸ் லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சுந்தரேசன் மீது மோதியது.
தலை துண்டித்து சாவு
இதில் கீழே விழுந்த சுந்தரேசன் லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி, சுமார் 6 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டதில், அவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் சம்பவ இடத்திற்கு சென்று சுந்தரேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தினார். மேலும் விபத்தை ஏற்படுத்திய ராட்சத லாரி மற்றும் மொபட்டை போலீசார் பறிமுதல் செய்து, தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்