செல்போன் திருடிய வாலிபர் கைது

செல்போன் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-08-14 20:40 GMT
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அ.மேட்டூரை சேர்ந்தவர் ஸ்ரீதர்(வயது 20). சரக்கு ஆட்டோ டிரைவரான இவர் நேற்று அரும்பாவூர் கடைவீதியில் ஆட்டோவில் தனது செல்போனை வைத்துவிட்டு சென்றார். அப்போது அந்த வழியாகச் சென்ற வாலிபர் ஒருவர் செல்போனை எடுத்துக்கொண்டு ஓடியுள்ளார். இதனைப் பார்த்த அக்கம், பக்கத்தினர் அந்த வாலிபரை பிடித்து அரும்பாவூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில், அந்த வாலிபர் வெங்கனூரை சேர்ந்த முரளி(20) என்பதும், செல்போன் திருடியதும் தெரியவந்தது. இது குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முரளியை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்