தென்காசியில் 5 பேருக்கு கொரோனா
தென்காசி மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் நேற்று 5 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனுடன் சேர்த்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 26 ஆயிரத்து 944 பேரில், 26 ஆயிரத்து 377 பேர் வீடு திரும்பி உள்ளனர். 83 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று 13 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.