திருமங்கலம் அருகே உள்ள சித்தாலை கிராமத்தை சேர்ந்தவர் பூலோக சுந்தர விஜயன் (வயது 68). ஊராட்சி மன்ற தலைவர். இவர் சித்தாலை கிராமத்தில் உள்ள தனக்கு ெசாந்தமான வீட்டை பூட்டி விட்டு தற்போது குடும்பத்துடன் திருமங்கலத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவரது சொந்த ஊரில் உள்ள வீடு பூட்டி கிடப்பதை பார்த்த மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து டி.வி., விலை உயர்ந்த மின்சாதன பொருட்களை திருடி சென்று விட்டனர். திருடு போன பொருட்களின் மதிப்பு ரூ.1 லட்சத்திற்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து அவர் திருமங்கலம் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.