கார் மோதி தொழிலாளி சாவு

சிவகிரி அருகே கார் மோதி தொழிலாளி இறந்தார்.;

Update: 2021-08-14 19:58 GMT
சிவகிரி:
சிவகிரி சந்தப்பேட்டை தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 60). கூலித் தொழிலாளியான இவர் சிவகிரிக்கு வடக்கே தென்காசி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மொட்டை மலை அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த கார் திடீரென முருகன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டிச் சென்ற தேவிப்பட்டணம் நடுவூர் ராமசாமியாபுரத்தை சேர்ந்த தெய்வராஜா (26) என்பவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்