மதுபாட்டில்கள் விற்றவர் கைது

மதுபாட்டில்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-08-14 19:55 GMT
திருவேங்கடம்:
திருவேங்கடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கமலாதேவி மற்றும் போலீசார் திருவேங்கடம்- ஆவுடையாபுரம் சாலையில் ரோந்து சென்றனர் அப்போது வேலி மறைவில் இருந்து தப்பி ஓட முயன்றவரை போலீசார் பிடித்தனர். விசாரணையில், கீழத்திருவேங்கடம் வடக்கு பாறைப்பட்டியை சேர்ந்த ஜெபகனி (வயது 45) என்பதும், சட்டவிரோதமாக மது விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, 45 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்