பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி
கடையம் அருகே பெண்ணிடம் நகை பறிக்க முயன்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடையம்:
கடையம் அருகே உள்ள லட்சுமியூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் தாேமாதரன் மனைவி சொர்ணதேவி (வயது 30). இவர் நேற்று முன்தினம் பீடிக்கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டு இருந்தார். அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென்று சொர்ணதேவி கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். உடனே சுதாரித்துக் கொண்ட சொர்ணதேவி சங்கிலியை இறுக பிடித்துக் கொண்டு, திருடன் திருடன் என்று சத்தம் போட்டார்.
அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததும், 2 வாலிபர்களும் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.