தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை

சாத்தூர் அருகே தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-08-14 19:46 GMT
சாத்தூர், 
திருநெல்வேலி மாவட்டம் அளவந்தான்குளத்தை சேர்ந்தவர் சார்லஸ் (வயது 43). இவர் சாத்தூர் அருகே கோட்டூரில் சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வந்துள்ளார். உடல் நலம் பாதிக்கபட்டு இருந்த இவர் சாத்தூர் அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்தார். இந்த நிலையில் விடுதியில் வேலை பார்க்கும் வெங்கடேஷ் என்பவர் வெகுநேரம் கதவை தட்டியும் திறக்காததால் தள்ளி திறந்த போது சார்லஸ் விடுதி அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து  சாத்தூர் தாலுகா போலீசாருக்கு தகவல் அளித்தனர். விடுதிக்கு வந்த போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சார்லஸ் மனைவி ஜீலியட் மேரி (39) கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்