செல்போன் பறித்த 2 பேர் கைது
சிவகாசியில் செல்போன் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
சிவகாசி காமராஜர்நகர் மேற்கு பகுதியில் உள்ள கந்தபுரம் காலனியை சேர்ந்தவர் மணிவேல்ராஜன் (வயது 47). இவர் ஆடு, மாடுகளை வளர்த்து விற்கும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் மணிவேல்ராஜன் தனது வீட்டின் அருகில் உள்ள ஒரு இடத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டு இருந்தார். அப் போது அங்கு வந்த லிங்கபுரம் காலனியை சேர்ந்த முனியசாமி என்கிற கொலுசு ( 20), விஜயசாமிநாதன் (24) ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி மணிவேல்ராஜனிடம் இருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதை தொடர்ந்து மணிவேல்ராஜன் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.