ெரயில் பாதையில் போலீசார் தீவிர சோதனை
சுதந்திரதினத்தையொட்டி ரெயில்பாதைகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
விருதுநகர்,
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ெரயில் பாதைகளில் போலீசார் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த வகையில் விருதுநகரில் ெரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா மோகன், சப் -இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், ெரயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் ஆகியோர் தலைமையில் ெரயில்வே போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் ெரயில் பாதைகளில் சோதனை நடத்தினர். விருதுநகர் கவுசிகா நதி பாலத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. விருதுநகர் ெரயில் நிலையம் மற்றும் ெரயில் நிலைய வளாகம் முற்றிலுமாக போலீசாரின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது.