மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.;
குளித்தலை
குளித்தலை காவல்கார தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 33), கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் குளித்தலை என்.ஜி.ஓ. காலனியில் உள்ள அப்துல்லா என்பவரின் வீட்டில் பழைய சுவற்றை இரும்பு கம்பியால் இடித்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே மாணிக்கம் உயிரிழந்தார். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்குப்திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.