மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் மாவீரன் சுந்தரலிங்கனார் மகக்ள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
நெல்லை:
மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத்தினர் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென அதன் தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சாதிரீதியாக பட்டியல் இன மக்களை இழிவாக பேசிய நடிகை மீரா மிதுணை கண்டித்தும், அவரது படத்திற்கு செருப்பு மாலை அணிவித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் நடிகை மீரா மிதுணையை கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.