தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 57). இவர் மதுரை நாராயணபுரம் பகுதியை சேர்ந்த என்ஜினீயர் மணிகண்டன் என்பவரிடம் காவலாளியாக வேலை பார்த்தார். தற்போது கொட்டாம்பட்டி அருகே உள்ள 18 சுக்காம்பட்டியில் மீனா என்பவருக்கு புதிய வீடு கட்டும் பணி நடக்கிறது. அங்கு கடந்த 1½ மாதமாக காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கட்டிடத்தின் மேல்தளத்தில் தண்ணீர் பிடித்த போது திடீரென்று முருகேசன் மயங்கி விழுந்து இறந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் கொட்டாம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினார்கள்.