நெல்லையப்பர் கோவில் முன்பு வழிபாடு நடத்திய 5 பேர் கைது
நெல்லையப்பர் கோவில் முன்பு வழிபாடு நடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பல்வேறு இடங்களிலும் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்வதற்கும், பின்னர் சிலைகளை ஆற்றில் கரைப்பதற்கும் தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க கூடாது என்பதை வலியுறுத்தியும், இந்து தேசிய கட்சியின் சார்பில், அனைத்து கோவில்களின் முன்பும் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்வது என்றும் இந்து தேசிய கட்சியினர் நேற்று தமிழகம் முழுவதும் உள்ள பெரிய கோவில்களின் முன்பு வழிபாடு நடத்துவதாக அறிவித்தனர்.
அதன்படி நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் முன்பு இந்து தேசிய கட்சியினர் வழிபாடு நடத்தினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அனுமதியின்றி வழிபாடு நடத்தக்கூடாது என்று கூறி, இந்து தேசிய கட்சி தலைவர் எஸ்.எஸ்.எஸ்.மணி, மாநில அமைப்பு செயலாளர் வன்னி முருகேசன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.