கங்கைகொண்டான் அருகே ஆட்டோ மீது கார் மோதல்; டிரைவர் பலி

கங்கைகொண்டான் அருகே ஆட்ேடா மீது கார் மோதிய விபத்தில் டிரைவர் பலியானார். ேமலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2021-08-14 17:45 GMT
கயத்தாறு:
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள பலபத்திரராமபுரத்தை சேர்ந்தவர் முருகையா மகன் செல்வராஜ் (வயது 35). ஆட்டோ டிரைவர். இவர் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்கு அச்சம்பட்டியை சேர்ந்த ஆரோக்கியம் (35) என்பவரை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு, சங்கரன்கோவிலில் இருந்து நெல்லை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

கங்கைகொண்டான் அருகே பருத்திகுளம் பெட்ரோல் பங்க் முன்பு நாற்கர சாலையில் வந்தபோது, மதுரையில் இருந்து நெல்லை நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக ஆட்டோவின் பின்புறத்தில் மோதியது. 

இதில் ஆட்டோ டிரைவர் செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் ஆரோக்கியத்துக்கு கால் முறிவு ஏற்பட்டு, படுகாயம் அடைந்தார். இதுதவிர காரில் வந்த 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கங்கைகொண்டான் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் செல்வராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து கங்கைகொண்டான் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்