தூத்துக்குடி கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு

தூத்துக்குடி கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2021-08-14 17:41 GMT
தூத்துக்குடி:
உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் செந்தில்குமார் உத்தரவின் பேரிலும், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வழிகாட்டுதலிலும் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி நேற்று தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் போல்பேட்டை மற்றும் பாளையங்கோட்டை ரோடு பகுதிகளில் உள்ள சமையல் எண்ணெய் விற்பனை கடைகளில் மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் மற்றும் மாநகர பகுதி-1 உணவு பாதுகாப்பு அலுவலர் சக்திமுருகன் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது, 2 கடைகளில் பொட்டலமிடாத வகையில் சில்லறையாக விற்பனை செய்ய வைத்திருந்த நல்லெண்ணெய், கடலை எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் போன்றவை கண்டறியப்பட்டு, சுமார் 65 லிட்டர் சமையல் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்