ஆழ்வார்திருநகரி கோவிலில் பட்சிராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

ஆழ்வார்திருநகரி கோவிலில் பட்சிராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

Update: 2021-08-14 17:31 GMT
தென்திருப்பேரை:
பட்சிராஜர் அவதரித்த தினமான ஆடி சுவாதியை முன்னிட்டு, ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. கோவில் வடக்கு மதிலில் உள்ள பட்சிராஜருக்கு 2 ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தேன், பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.  பின்னர் பட்சிராஜருக்கு தங்க கவசம் அணிவித்து வழிபட்டனர். விழாவில் பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்