வாளுடன் வாலிபர் கைது

வாளுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-08-14 16:56 GMT
பனைக்குளம், 
மண்டபம் அருகே மரைக்காயர்பட்டிணம் சோதனைச் சாவடி அருகே மண்டபம் சப்-இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இடையர் வலசை கிராமத்தை சேர்ந்த தினேஷ்குமார் (வயது29) என்பவர் பதிவு செய்யப்படாத இருசக்கர வாகனத்தில் வந்தார். சந்தேகமடைந்த போலீசார் அவரை நிறுத்தி சோதனை செய்தபோது அவரிடம் இரும்பாலான கூர்மையான வாள் கீழே விழுந்தது. இதையடுத்து போலீசார் தினேஷ்குமாரை கைது செய்து, ஆயுதம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மண்டபம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்