காட்பாடி வழியாக செல்லும் ரெயில்களில் போலீசார் தீவிர சோதனை

சுதந்திர தினத்தை முன்னிட்டு காட்பாடி வழியாக செல்லும் ரெயில்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-08-14 16:15 GMT
காட்பாடி

சுதந்திர தினத்தை முன்னிட்டு காட்பாடி வழியாக செல்லும் ரெயில்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். 

சுதந்திர தினம்

நாடு முழுவதும் 75 வது சுதந்திர தினம் இன்று ஞா (யிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. 

இதனை முன்னிட்டு முக்கிய ரெயில் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரெயில்களில் போலீசார் சோதனை

காட்பாடி ரெயில் நிலையத்தில் காட்பாடி வழியாக செல்லும் ெரயில்களின் பெட்டிகளில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஏறி சோதனை நடத்துகின்றனர். 

இதில் பயணிகள் உடமைகளில் தீப்பிடிக்கும் பொருட்களை ஏதாவது கொண்டு செல்கிறார்களா அல்லது சந்தேகப்படும் வகையில் ஏதாவது பொருட்கள் இருக்கிறதா என மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்கின்றனர்.

மெட்டல் டிடெக்டர் சோதனை

மேலும் ரெயில் நிலையத்தில் நுழையும் போது ஒவ்வொருவரும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.

ரெயில்களில் மட்டுமல்லாது ரெயில்வே தண்டவாளங்களிலும் போலீசார் மெட்டல் டிடெக்டர் மற்றும் வெடிகுண்டை கண்டுபிடிக்கும் கருவி மூலம் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.
கண்காணிப்பு கேமராக்கள்

காட்பாடி ரெயில் நிலையம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கண்காணிப்பு கேமராக்களின் மானிட்டர் ரெயில்வே பாதுகாப்பு படை அலுவலகத்தில் உள்ளது.

மானிட்டர் மூலம் போலீசார் இரவு, பகலாக கண்காணித்து வருகின்றனர். யாராவது சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிகிறார்களா அல்லது பொருட்களை எடுத்துச் செல்கிறார்களா என கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் கண்காணித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்