வேலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலி
வேலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் உயிரிழந்தனர்.
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் கொரோனா 3-வது அலை பரவலை தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
ஆனாலும் கடந்த 2 நாட்களாக கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்தது. 40-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்டது.
இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் மேலும் 18 பேர் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது.
அதையடுத்து அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
வேலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதன்மூலம் கொரோனாவினால் பலியானோர் எண்ணிக்கை 1,101 உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க பொதுமக்கள் அனைவரும் அருகே நடைபெறும் சிறப்பு முகாமில் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.