ரெயில் விமான நிலையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு
ரெயில் விமான நிலையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு
கோவை
நாடு முழுவதும் சுதந்திரதின விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி கோவை மாநகர பகுதிகளில் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக கோவை ரெயில்நிலையத்தில் போலீசார் நேற்று தீவிர சோதனை மேற்கொண்டனர்.
ரெயில் நிலையத்தில் உள்ள அனைத்து நடைமேடைகள், தண்டவாளம், மற்றும் பார்சல் மையம், கார் மற்றும் பைக் பார்க்கிங் பகுதிகளில் காலை முதல், வெடிகுண்டு கண்டறியும் கருவிகளை கொண்டு சோதனை செய்தனர்.
ரெயில் நிலையத்துக்கு வந்த பயணிகளின் உடைமைகள் ஸ்கேனர் கருவி மூலம் சோதனை செய்த பிறகே உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
பிற மாநிலங்களில் இருந்து கோவைக்கு வந்த ரெயில்களின் பெட்டிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதேபோல் கோவை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை மற்றும் கண் காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.