சிறுமியை கடத்திச்சென்று பாலியல் தொல்லை - வாலிபர் கைது

கும்மிடிப்பூண்டி அருகே சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-08-14 06:13 GMT
கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி அடுத்த மேட்டுகாலனியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). திருமணமான இவர், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில், கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வாலிபர் மணிகண்டனை நேற்று கைது செய்தனர். 

அதே போல், திருவள்ளூரை அடுத்த ஈக்காடு வள்ளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில் என்ற சற்குணம் (25). நேற்று முன்தினம் செந்தில் அப்பகுதியை சேர்ந்த குடும்பத்தாருடன் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை அத்துமீறி தாக்கி கடத்த முயன்றதாக கூறப்படுகிறது.

இதைதொடர்ந்து சிறுமி அலறி கூச்சலிட்டார். இதைக்கண்ட அச்சிறுமியின் பெற்றோர்கள் அவரை பிடித்து புல்லரம்பாக்கம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து செந்திலை கைது செய்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்