வடமாநில வாலிபர்களை குறி வைத்து செல்போன் திருட்டு; போலீஸ்காரர் கைது

சென்னையில் வடமாநில வாலிபர்களை குறி வைத்து செல்போன் திருடிய வழக்கில் போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2021-08-14 04:14 GMT
பூந்தமல்லி,

சென்னை அமைந்தகரை, அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வடமாநில வாலிபர்கள் தங்கி இருக்கும் வீடு மற்றும் அவர்கள் பணிபுரியும் இடங்களில் இருந்து அடிக்கடி செல்போன்கள் திருடு போய் வந்தது. இது தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி சம்பவம் தொடர்பாக புழல் மத்திய சிறையில் போலீஸ்காரராக பணியாற்றும் ரமேஷ் (வயது 28), அவருடைய நண்பர் கார்த்திக்(32) மற்றும் சிபி (29) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

விசாரணையில், செல்போன் திருட்டு வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்ட சிபியுடன் போலீஸ்காரர் ரமேசுக்கு பழக்கம் ஏற்பட்டது. சிறையில் இருந்து சிபி வெளியே வந்தபிறகு மீண்டும் வடமாநில வாலிபர்களை குறி வைத்து செல்போன்களை திருடி போலீஸ்காரர் ரமேசிடம் கொடுப்பார். அவர், கார்த்திக் மூலம் அதனை விற்று கொடுப்பார். அதில் கிடைக்கும் பணத்தை 3 பேரும் பங்கு போட்டுக்கொள்வது தெரிந்தது. கைதான 3 பேரையும் அமைந்தகரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

மேலும் செய்திகள்