எருமப்பட்டி:
எருமப்பட்டி அருகே உள்ள பவித்திரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி கற்பகம் (வயது 45). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளியே வந்தபோது அங்கு பதுங்கியிருந்த பாம்பு ஒன்று அவரை கடித்தது. வலியால் அவர் அலறி துடிக்கவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கற்பகத்தை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கற்பகம் இறந்தார். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
==========