கிருஷ்ணகிரியில் வீட்டில் அழகிகளை வைத்து விபசாரம் புரோக்கர்கள் 2 பேர் கைது

கிருஷ்ணகிரியில் வீட்டில் அழகிகளை வைத்து விபசாரம் புரோக்கர்கள் 2 பேர் கைது

Update: 2021-08-13 22:29 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் வீட்டில் அழகிகளை வைத்து விபசாரம் நடத்திய புரோக்கர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
விபசாரம் 
கிருஷ்ணகிரி சத்ய சாய் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அடிக்கடி ஆண்கள் வந்து போவதாகவும், இளம்பெண்கள் சிலர் அந்த வீட்டில் தங்கி இருப்பதாகவும் கிருஷ்ணகிரி தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு அந்த வீட்டில் திடீரென சோதனை செய்தனர். 
அப்போது அந்த வீட்டில் 3 இளம்பெண்கள் இருந்தது தெரிய வந்தது. மேலும் அவர்கள் பெங்களூரு, தர்மபுரி, திருவாரூர் மாவட்ட பகுதிகளை சேர்ந்த இளம்பெண்கள் என்பது தெரிந்தது. இவர்களை புரோக்கர்கள் ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்து கிருஷ்ணகிரியில் தங்க வைத்து விபசார தொழிலில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது.
2 புரோக்கர்கள் கைது 
இதையடுத்து போலீசார் அந்த 3 இளம்பெண்களையும் மீட்டனர். அழகிகளை விபசார தொழிலில் ஈடுபடுத்திய மகாராஜகடை பக்கமுள்ள வரட்டனப்பள்ளியை சேர்ந்த புரோக்கர் காவ்யா என்கிற அருள்ஜோதி (வயது27), திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி பாரத கோவில் தெருவை சேர்ந்த சஞ்சீவ் (32) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய புரோக்கர்கள் முருகேஷ்குமார், முஸ்தாப் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
=======

மேலும் செய்திகள்