கிருஷ்ணகிரியில் கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் தொந்தரவு ஜிம் உரிமையாளர் கைது
கிருஷ்ணகிரியில் கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் தொந்தரவு ஜிம் உரிமையாளர் கைது
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் கல்லூரி மாணவியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு செய்த ஜிம் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ஜிம் உரிமையாளர்
திருப்பத்தூர் மாவட்டம் காகங்கரை பகுதியை சேர்ந்தவர் சிரஞ்சீவி (வயது 26). இவர் அந்த பகுதியில் ஜிம் நடத்தி வந்தார். இவரது சகோதரியும், கிருஷ்ணகிரியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவியும் தோழிகள் ஆவார்கள். இதனால் சிரஞ்சீவி கிருஷ்ணகிரிக்கு வந்து அந்த மாணவியுடன் பழகி வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி சிரஞ்சீவி அந்த மாணவியை திருமணம் செய்யும் நோக்கத்தில் கடத்தி சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
கைது
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமித்ரா விசாரணை நடத்தி சிரஞ்சீவியை கைது செய்தார். மேலும் அவர் மீது கடத்தல், போக்சோ உள்பட பல பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கல்லூரி மாணவியை ஜிம் உரிமையாளர் கடத்தி சென்று பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
=========