3 பவுன் நகை திருட்டு

செக்கானூரணி அருகே 3 பவுன் நகை திருடு போனது.

Update: 2021-08-13 21:23 GMT
சோழவந்தான்,

 செக்கானூரணி அருகே பண்ணையான் கிராமத்தைச் சேர்ந்தவர் காசிபாண்டி(வயது 40). இவர் திருவேடகம் வைகை ஆற்றில் தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்தார்.அப்போது அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலி தண்ணீரில் விழுந்தது. அருகில் குளித்து கொண்டிருந்த வாலிபர் நகையை எடுத்ததாக காசிபாண்டி தகராறு செய்து உள்ளார். அதற்கு அந்த வாலிபர் நான் நகை எடுக்கவில்லை என்று கூறி இருக்கிறார். அதன்பிறகு அவர் சென்று விட்டார். இது குறித்து சோழவந்தான் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து தங்க நகையை எடுத்து சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்