மதுரையில் நேற்று 22 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் 14 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். மதுரையில் இதுவரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 73 ஆயிரத்து 769 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல், நேற்று 21 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இவர்களில் 12 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். நேற்றுடன் மதுரையில், 72 ஆயிரத்து 390 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் 231 ஆக குறைந்துள்ளது. மதுரையில் கொரோனா பாதிப்பால் நேற்று யாரும் உயிரிழக்கவில்லை. இதன் மூலம், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,148 ஆக உள்ளது.