அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 16 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே சிகிச்சையில் இருந்தவர்களில் 23 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். ஆனால் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 55 வயதுடைய ஆண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நேற்று மாவட்டத்தில் 2,115 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.