60 லிட்டர் சாராய ஊறல் வைத்திருந்தவர் கைது

60 லிட்டர் சாராய ஊறல் வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-08-13 20:32 GMT
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி சக்கரவர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி மற்றும் போலீசாருக்கு முந்திரிக்காட்டில் சாராய ஊறல் வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உடையார்பாளையத்தை அடுத்த ஒக்கநத்தம் கிராமத்தை சேர்ந்த ஆதி என்ற சாமிநாதனுக்கு(வயது 47) சொந்தமான முந்திரிக்காட்டில் 4 பேரல்களில் 60 லிட்டர் சாராய ஊறல் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து சாமிநாதனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சாராய ஊறலை பறிமுதல் செய்து அழித்தனர்.

மேலும் செய்திகள்