சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; தொழிலாளி போக்சோவில் கைது
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.;
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் நாச்சியார்பேட்டை வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜசேகர். கூலி தொழிலாளியான இவர், சம்பவத்தன்று 15 வயது சிறுமியை பாலியில் தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் தாய் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜசேகரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.