அனுமதியின்றி மண் அள்ளிய பொக்லைன் எந்திரம் பறிமுதல்

அனுமதியின்றி மண் அள்ளிய பொக்லைன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-08-13 20:31 GMT
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கோவிலூர் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரனின் மகன் காமராஜ். இவர் ஆண்டிபட்டாகாடு கிராமத்தில் அனுமதியின்றி பொக்லைன் எந்திரத்தின் மூலம் மண் அள்ளியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ஆண்டிபட்டக்காடு கிராம நிர்வாக அலுவலர் சிவராஜன் அங்கு சென்று பார்த்து கீழப்பழுவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்து, இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்