வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது
சூலுர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
கருமத்தம்பட்டி
சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் யோகேஷ் (வயது 20). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் கலங்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டி யோகேஷ் கழுத்தில் கிடந்த வெள்ளி செயினை பறித்து சென்றார்.
இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வழிப்பறியில் ஈடுபட்ட சூலூர் பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்த உதய சதீஷ் (21) என்பவரை கைது செய்தனர்.