முதியவருக்கு 5 ஆண்டு ஜெயில்

சிறுமியிடம் சில்மிஷம் செய்ததாக முதியவருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2021-08-13 20:26 GMT
சேலம், ஆக.14-
எடப்பாடி அருகே சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 60). இவர் கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 10 வயது சிறுமியை சில்மிஷம் செய்துள்ளார். இதுகுறித்து சங்ககிரி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காளியப்பனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சேலம் போக்சோ கோர்ட்டில் நடந்தது. வழக்கில் விசாரணை முடிந்ததால் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதாவது, சிறுமியிடம் சில்மிஷம் செய்த குற்றத்திற்காக காளியப்பனுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி முருகானந்தம் தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்