அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.6 லட்சம் மோசடி

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.6 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-08-13 20:26 GMT
புதுக்கோட்டை
விராலிமலை
விராலிமலை ஒன்றியம் புதுபட்டியை சேர்ந்தவர் வேளாங்கண்ணி (வயது 38). இவரது மனைவிக்கு சத்துணவு துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.6 லட்சத்தை கடந்த 2019-ம் ஆண்டு விராலிமலை தெற்குத் தெருவில் அ.தி.மு.க.வை சேர்ந்த ஜேசுராஜ் மற்றும் அவரது மனைவி அனுசியா ஆகிய இருவரும் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை வேலை வாங்கி தரவில்லை. இதுகுறித்து வேளாங்கண்ணியும், அவரது மனைவியும் பல முறை கேட்டும் வேலை வாங்கி தராமலும், பணத்தை திருப்பி தராமலும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று முன்தினம் விராலிமலை போலீசில் வேளாங்கண்ணி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் ஜேசுராஜ் மற்றும் அனுசியா ஆகிய இருவரின் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று விராலிமலை போலீசார் ஜேசுராஜை கைது செய்தனர். இதேபோல, வேலை வாங்கி தருவதாக ஏமாற்றியதாக ஜேசுராஜ் மீது மேலும் 3 பெண்கள் புகார் கொடுத்தனர்.

மேலும் செய்திகள்